
easytocookஎளிதான முறையில் சமைத்து ருசித்து ரசித்து சாப்பிட. . . . . .
Easy To Cook
வறுவல்
பாகற்காய் வறுவல்

தேவையான பொருட்கள்
பெரிய பாகற்காய் : 3
பெரிய வெங்காயம் : 1
பூண்டு : 4 பற்கள்
எண்ணெய் : 6 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி : 3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி : 1 தேக்கரண்டி
உப்பு : தேவையான அளவு
easytocook
செய்முறை :
பாகற்காயை சிறு வட்டங்களாக வெட்டிக்கொள்ளவும். பிறகு மஞ்சள் பொடியும், உப்பும் சேர்த்துப் பிறட்டி, அதை இட்லிச் சட்டியில் தண்ணீர் வைத்து அதனுள் இட்லி தட்டு வைத்து அதில் வெட்டி வைத்திருக்கிற பாகற்காயை ஆவியில் வேக வைக்கவும். ஆவியில் அரை வேக்காடு வேக வைக்க வேண்டும்.
பின் வாணலியில் எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடேறியவுடன் பாகற்காய் துண்டுகளுடன் மிளகாய்ப்பொடி சேர்த்து வதக்கவும். பாகற்காய் சற்றே வதங்கியவுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வறுக்கவும். நன்றாகச் சிவக்கும் வரை வறுக்கவும்.
குறிப்பு
பெரிய வெங்காயத்திற்குப் பதிலாக சின்ன வெங்காயம் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும். பாகற்காய் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து பாகற்காய் சாப்பிட்டு வந்தால் நீரிழிவை அறவே நீக்கிவிடலாம்.