
easytocookஎளிதான முறையில் சமைத்து ருசித்து ரசித்து சாப்பிட. . . . . .
Easy To Cook
சாம்பார்
வெண்டைக்காய் சாம்பார்

தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு - 150 கிராம்
வெண்டைக்காய் - 1/4 கிலோ
பெ.வெங்காயம் - 1
ப.மிளகாய் - 3
தக்காளி - 3 (மீடியம் சைஸ்)
புளி - 25 கிராம்
சாம்பார் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
தாளிக்க:
சி.வெங்காயம் - 5
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, உளுந்து - தேவையான அளவு
கருவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை:
* பருப்பை வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
* வெண்டைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு எண்ணெய்விட்டு வதைக்கி வைத்துக்கொள்ளவும்.
* வேக வைத்த பருப்பில் சாம்பார் பொடியை போட்டு புளிக்கரைசலை விட்டு தக்காளி, வெங்காயம், ப.மிளகாய் ஆகியவைகளை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு கடுகுஉளுந்து, கருவேப்பிலை, சி.வெங்காயம், ஆகியவைகளை சேர்த்து தாளிக்கவும்.
* தாளித்தவுடன் தேங்காய் துறுவலை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
* பிறகு அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்தமல்லியை சேர்க்கவும்.
* கமகமக்கும் சுவையான சாம்பார் ரெடி.
* அப்பறென்னங்க ஒங்க வீடே ஒரே சாம்பார் வாசனையாதான் இருக்கும்.
முருங்கைக்காய் சாம்பார்

செய்முறை
முதலில் துவரம் பருப்பை மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். அரைக்கவேண்டிய பொருட்களை வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்து மிக்சியில் பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
முருங்கை, கத்தரி, காரட் போன்றவைகளை பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி போட்டு சேர்த்து வதக்கவும். அத்துடன் காய்கறிகளை சேர்த்து வதக்கவும். அத்துடன் சிறிதளவு உப்பு போட்டு அரைத்து வைத்துள்ள பொடியை பொட்டு நன்றாக கிளறி சிறிதளவு தண்ணீர், கரைத்து வைத்த புளி ஊற்றி கொதிக்க வைக்கவும்.
இத்துடன் வேகவைத்துள்ள துவரம்பருப்பை போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். காய்கள் நன்றாக வெந்த உடன் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வெந்தையம் போட்டு தாளித்து ஊற்றவும். சாம்பாரை அடுப்பில் இருந்து இறக்கும் முன்பு கடைசியாக பெருங்காயத்தூள் போடவும். சுவையான அரைத்து விட்ட சாம்பார் ரெடி. சாதத்திற்கு ஏற்ற சத்தான சாம்பார்
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு ; 1 கப்
முருங்கைக்காய் ; 2
கத்தரிக்காய் : 3
காரட் - 1
சின்ன வெங்காயம் : 10
தக்காளி : 2
புளி : எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் : 1 சிறிய ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
கறிவேப்பிலை : சிறிது
தாளிக்க : கடுகு, உளுந்து வெந்தையம் ,பெருங்காயத்தூள் : சிறிதளவு
அரைக்க தேவையானவை வரமிளகாய் : 5
கொத்தமல்லி : 3 டீ ஸ்பூன்
சீரகம் : 1 டீ ஸ்பூன்
மிளகு : 1 டீ ஸ்பூன்
இட்லி சாம்பார்

தேவையான பொருட்கள் :
-
துவரம்பருப்பு-ஒரு கோப்பை
-
பிடித்தமான காய்கறி-இரண்டு கோப்பை
-
வெங்காயம்-ஒன்று
-
தக்காளி-ஒன்று
-
புளி-எலுமிச்சையளவு
-
சாம்பார் பொடி-இரண்டு தேக்கரண்டி
-
பச்சைமிளகாய்-இரண்டு
-
உப்பு-தேவைகேற்ப
-
கடுகு-ஒரு தேக்கரண்டி
-
காய்ந்தமிளகாய்-இரண்டு
-
கறிவேப்பிலை-ஒரு கொத்து
-
கொத்தமல்லி-சிறிது
செய்முறை :
-
துவரம்பருப்புடன் தக்காளி மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சத்தூளைச் சேர்த்து வேகவைக்கவும்,
-
புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும்,காய்கறிகளை சிறிதாக நறுக்கி வைக்கவும்
-
பாத்திரத்தில் சிறிது எண்ணெயைக் காயவைத்து அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் அனைத்து காய்களையும் போட்டு வதக்கவும்,
-
பின்பு அதில் புளிக்கரைசலை ஊற்றி சாம்பார்பொடி,உப்பு,பச்சைமிளகாய் மற்றும் தேவையான நீர்ச் சேர்த்து கொதிக்கவிடவும்,
-
காய்கள் நன்கு வெந்ததும் துவரம்பருப்பை சேர்த்து ஒரு கொதிவந்ததும் கொத்தமல்லியைத் தூவி அடுப்பை அணைக்கவும்,
-
பின்பு கடுகு உளுத்தம்பருப்பு காய்ந்தமிளகாய் மற்றும் கறிவேப்பிலையைத் தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்,
-
சுவையான இட்லி சாம்பார் தயார்.
செய்முறை :
குக்கரில் பருப்புடன் வெங்காயம் பூண்டு தக்காளி மஞ்சத்துள் ஆகியவற்றைப் போட்டு வேகவைக்கவும்.
முள்ளங்கியை மெல்லியதாக நறுக்கி அதை கடாயில் போட்டு சிறிது எண்ணெயில் வதக்கவும்.
பின்பு அதில் அனைத்து பொடிகளையும் போட்டு நன்கு வதக்கி புளிக் கரைசலை ஊற்றவும்.
அதைத் தொடர்ந்து தேவையான நீரை அதில் ஊற்றி உப்பைச் சேர்த்து கொதிக்க விடவும்.
காய் நன்கு வெந்ததும் வேகவைத்த பருப்பு மற்றும் கொத்தமல்லியைச் சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து தாளிப்புப் பொருட்களை போட்டு தாளித்து சாம்பாரில் கொட்டவும்.
சுவையான முள்ளங்கி சாம்பார் தயார்.
முள்ளங்கி சாம்பார்

தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு-1/2 கோப்பை
முள்ளங்கி-1/4 கிலோ
தக்காளி-2
வெங்காயம்-2
புளி-சிறிய எலுமிச்சையளவு
பூண்டு-நான்கு பற்கள்
மிளகாய்த்துள்-இரண்டு தேக்கரண்டி
தனியாத்துள்-இரண்டு தேக்கரண்டி
மஞ்சத்துள்-அரைத் தேக்கரண்டி
பெருங்காயம்-ஒரு சிட்டிக்கை
கொத்தமல்லி-ஒரு கைப்பிடி
தாளிக்க;
கடுகு, சீரகம்- ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை-ஒரு கொத்து
காய்ந்தமிளகாய்-இரண்டு
வெங்காயம்-இரண்டு மேசைக்கரண்டி
உப்பு-தேவைக்கேற்ப
எண்ணெய்- தேவைகேற்ப
வெங்காய சாம்பார்

தேவையான பொருட்கள் :
-
துவரம் பருப்பு- 1/ 2 கோப்பை
-
சாம்பார் வெங்காயம்- 20
-
தக்காளி- இரண்டு
-
பச்சைமிளகாய்- 2
-
சாம்பார் பொடி-2 தேக்கரண்டி
-
மஞ்சத்துள்- அரைதேக்கரண்டி
-
தேங்காய்- காலக் கோப்பை
-
புளி- ஒரு எலுமிச்சையளவு
-
கொத்தமல்லி- தேவையான அளவு
-
கறிவேப்பிலை-ஒரு கொத்து
-
கடுகு சீரகம் - ஒரு தேக்கரண்டி
-
பெருங்காயம்- கால் தேக்கரண்டி
-
உப்பு- ஒரு தேக்கரண்டி
-
காய்ந்த மிளகாய்- 2
செய்முறை :
-
துவரம் பருப்பில் மஞ்சத்துள் பெருங்காயத்துளைப் போட்டு குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
-
புளியை இரண்டு கோப்பை நீரில் கரைத்து வைக்கவும். வெங்காயத்தில் தோலை உரித்து வைக்கவும்.
-
தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். தேங்காயுடன் சாம்பார் பொடியைச் சேர்த்து அரைத்து வைக்கவும்.
-
வாணலியில் 2 tsp எண்ணெயை சூடாக்கி அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
-
பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீர்,தேங்காய் விழுது, தக்காளி, பச்சைமிளகாய் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
-
நன்கு கொதித்தவுடன் பருப்பைக் கொட்டி தேவையானால் சிறிது நீரைச் சேர்த்து கலக்கி ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லியைப் போட்டு இறக்கிவைக்கவும்.
-
பின்பு எண்ணெயில் கடுகு மற்றும் தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளித்து கொட்டவும். சுவையான வெங்காய சாம்பார் தயார்.
கத்திரிகாய் சாம்பார்

செய்முறை :
-
பயத்தம் பருப்பு அல்லது துவரம்பருப்புடன் மஞ்சத்தூள் பெருங்காயம்
-
தக்காளி பச்சைமிளகாய் ஆகியவர்றைப் போட்டு வேகவைத்துக் கொள்ளவும்,
-
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கத்திரிக்காயுடன் வெங்காயம் மிளகாய்த்தூள், தனியாத்தூள் உப்புத்தூளைப் போட்டு புளித்தண்ணீரைச் சேர்த்து வேகவிடவும்,
-
காய் வெந்ததும் பருப்பைக் கொட்டி ஒரு கொதிவந்ததும்
-
கொத்தமல்லியைப் போடவும்
-
பின்பு கடுகு வெந்தயம் பூண்டு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் கொட்டவும்.
தேவையான பொருட்கள் :
-
பயத்தம் பருப்பு-அரைக் கோப்பை
-
கத்திரிகாய்-கால் கிலோ
-
சின்ன வெங்காயம்-ஒரு கோப்பை
-
தக்காளி-இரண்டு
-
பச்சைமிளகாய் -இரண்டு
-
பூண்டு -நான்கு பற்கள்
-
புளி- எலுமிச்சையளவு
-
மஞ்சத்தூள்-ஒரு சிட்டிகை
-
மிளகாய்த்தூள் -ஒரு தேக்கரண்டி
-
தனியாத்தூள்-ஒரு தேக்கரண்டி
-
கடுகு-ஒரு தேக்கரண்டி
-
வெந்தயம்-அரைத் தேக்கரண்டி
-
கறிவேப்பிலை-ஒரு கொத்து
-
கொத்தமல்லி -சிறிது
-
உப்பு-தேவைகேற்ப
-
எண்ணெய்-தாளிக்க
தக்காளி சாம்பார்

தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு- அரைக் கோப்பை
மஞ்சத்தூள்-கால் தேக்கரண்டி
பெருங்காயம்-கால் தேக்கரண்டி
நறுக்கிய தக்காளி- மூன்று
நறுக்கிய வெங்காயம்-ஒன்று
பச்சை மிளகாய்-இரண்டு
சாம்பார் பொடி-இரண்டு தேக்கரண்டி
புளித்தண்ணீர்(விருப்பமானால்)-அரை கோப்பை
கடுகு- ஒரு தேக்கரண்டி
சீரகம்-அரைத் தேக்கரண்டி
காய்ந்தமிளகாய்-இரண்டு
கறிவேப்பிலை-ஒரு கொத்து
கொத்தமல்லி-சிறிது
உப்பு-தேவைகேற்ப
செய்முறை :
பருப்புடன் தக்காளி மஞ்சத்தூள் மற்றும் பெருங்காயத்தைப் போட்டு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
வெங்காயம் பச்சைமிளகாய் சாம்பார் பொடி மற்றும் புளிக்கரைசலை அதில் ஊற்றி உப்பு போட்டு தேவையான நீரைச்சேர்த்து கொதிக்க விடவும்.
சாம்பார் நன்கு கொதித்ததும் கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.
ஒரு சிறிய கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு சீரகத்தைப் போட்டு அவை பொரிந்ததும் கறிவேப்பிலை காய்ந்தமிளகாயைப் போட்டு தாளித்து சாம்பாரில் ஊற்றவும்.
சுவையான தக்காளி சாம்பார் தயார்.
பருப்பு சாம்பார்

செய்முறை:
1. முதலில் குக்கரில் பருப்பு, பூண்டு, மிளகு, சீரகம், எண்ணெய் 1 ஸ்பூன், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
2. பிறகு வாணலியில் தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.
3. அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, நறுக்கிய ஏதாவது ஒரு காய் போட்டு நன்கு வதக்கவும்.
4. வதக்கிய பின் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
5. பிறகு புளியைக் கரைத்து கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
6. பிறகு வேக வைத்த பருப்பை மசித்து இதில் சேர்க்கவும். நன்கு கொதித்தபின் கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 1 கோப்பை
பூண்டு - 3 பல்லு
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகு - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
சாம்பார் வெங்காயம் - 1 கோப்பை (நறுக்கியது)
தக்காளி 2
புளி - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கத்தரி, முருங்கை, முள்ளங்கி, அவரை, பின்ஸ் - ஏதாவது ஒரு காய் 100 கிராம்.
தாளிக்க
கடுகு - 1/2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 ஸ்பூன்
உளுந்து - 1/2 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
வர மிளகாய் - 2
ரசப்பொடி - 1/2 ஸ்பூன்
கொத்து மல்லி தழை - சிறிது.