top of page

மட்டன் சுக்கா வறுவல்

சுக்கா வறுவல்

தேவையான பொருட்கள்:-

மட்டன்
வெங்காயம்
மஞ்சள் தூள்
உப்பு பட்டை, பிரிஞ்சி இழை மற்றும் சோம்பு
இஞ்சி பூண்டு விழுது
மிளகாய் தூள்
தனியா தூள்
மிளகு தூள்
பொட்டு கடலை மாவு
கொத்தமல்லி இழை
கறிவேப்பிலை
எண்ணெய்

செய்முறை :-

 

குக்கரில் மட்டனை போட்டு மஞ்சள் தூள், உப்பு மற்றும் இஞ்சி பூண்டு விழுது 1 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெயி ஊற்றி சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

 

மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் தனியா தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை கிளரவும். பச்சை வாசனை போனவுடன் வேக வைத்த கறியை போட்டு வதக்கவும். மட்டன் நன்கு வெந்து சுண்டி வரும் போது பொட்டுகடலை மாவு மற்றும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

  • Facebook - Black Circle
  • Twitter - Black Circle
  • Google+ - Black Circle
  • YouTube - Black Circle
  • Pinterest - Black Circle
ஈரல் வறுவல்

ஈரல் வறுவல்

தேவையான பொருட்கள்:

ஆட்டு ஈரல் – 500 கிராம்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
வர மிளகாய் – 4
இஞ்சி – பூண்டு விழுது 1 டீஸ்பூன்
மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
எண்ணை – 3 டேபிள்ஸ்பூன்
பட்டை, இலை – தாளிக்க

செய்முறை:

 

ஈரலை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி இருநூறு மி.லி தண்­ர் விட்டு முக்கால் வேக்காடு வேக வைக்க வேண்டும். தண்ணீ­ர் முழுவதும் சுண்டி விட வேண்டும்.

 

மிளகு, சீரகம், சோம்பு, வர மிளகாய் நான்கையும் பத்து நிமிடம் ஊற வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஈரலில் போட்டு பிசறி அரை மணி நேரம் வைக்க வேண்டும். வெங்காயத்தை நீள நீளமாகவும், பச்சை மிளகாயை சிறிது சிறிதாகவும் நறுக்கி வைக்க வேண்டும்.

 

அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி பட்டை, இலை தாளிக்க வேண்டும். வாசனை வந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி, சிவந்ததும் ப. மிளகாய், கறிவேப்பிலை போட வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து இஞ்சி – பூண்டு விழுது, ம.பொடி, ஒரு டீ ஸ்பூன் உப்பு மூன்றையும் சேர்த்து வதக்க வேண்டும்.

 

வதங்கியதும் ஈரல் கலவையைப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, அரை டம்ளர் தண்ணீ­ர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். அடிக்கடி திறந்து கிளறி விட வேண்டும். தண்­ணீர் வற்றியதும் இறக்க வேண்டும்.

  • Facebook - Black Circle
  • Twitter - Black Circle
  • Google+ - Black Circle
  • YouTube - Black Circle
  • Pinterest - Black Circle

 செய்முறை:

 

முதலில் மட்டன் நன்கு நீரில் கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

 

பின்னர் அதனை குக்கரில் போட்டு, 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, 6-7 விசில் விட்டு இறக்கி கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், மிளகு, சோம்பு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, சீரகம் மற்றும் மல்லி சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

 

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலா பொடியில் பாதியை சேர்த்து, அத்துடன் தக்காளியை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

 

பின்னர் குக்கரில் உள்ள மட்டன் துண்டுகளை வாணலியில் சேர்த்து, குக்கரில் உள்ள மட்டன் நீரில் பாதியை ஊற்றி, 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். இறுதியில் மீதமுள்ள மசாலா பொடியை சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், காரசாரமான மட்டன் சுக்கா ரெடி!!!

 

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத மட்டன் - 1 கிலோ

வெங்காயம் - 5 (நறுக்கியது)

தக்காளி - 4 (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2 (நீளமாக நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது

வரமிளகாய் - 4

மிளகு - 2 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

ஏலக்காய் - 2

பட்டை - 1 இன்ச்

கிராம்பு - 4

சீரகம் - 1 டீஸ்பூன்

மல்லி - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு Boneless Mutton Sukka: A Spicy Treat

bottom of page